முகப்பு

ஆபாச குறுஞ்செய்தி! விசாரணை அதிகாரி ஸ்ருஷ்டி சிங் கள்ளக்குறிச்சி வருகை!

அருள் விக்னேஷ் விவகாரத்தின் விசாரணை அதிகாரி ஸ்ருஷ்டி சிங் கள்ளக்குறிச்சி வருகை...

37 வினாடிகள் முன்பு
ஆபாச குறுஞ்செய்தி! விசாரணை அதிகாரி ஸ்ருஷ்டி சிங் கள்ளக்குறிச்சி வருகை!
ஸ்ருஷ்டி சிங் - x
பகிர்:

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகாரை விசாரிக்க விசாரணை அதிகாரி ஸ்ருஷ்டி சிங் வருகை தந்துள்ளார்.

பெண் மாவட்ட ஆட்சியருக்கு, கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஆா். திரிசூலி என்பவா் ரிட் மனு தாக்கல் செய்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யிடம் பெண் மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை புகார் அளித்தார்.

Advertisement

Advertisement

தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ருஷ்டி சிங் நியமிக்கப்பட்டார்.

இதனிடையே, அருள் விக்னேஷ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத 3 பிரிவுகள் மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரிடம் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

எம்எல்ஏ அருள் விக்னேஷ் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், விசாரணை அதிகாரியான திருப்பூர் எஸ்.பி. ஸ்ருஷ்டி சிங், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு புதன்கிழமை காலை வந்துள்ளார்.

அங்கு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஸ்ருஷ்டி சிங் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

summary

TVK MLA Obscene message to collector! Investigating officer Srushti Singh arrives in Kallakurichi!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.