காட்டுமன்னாா்கோவில் அருகே உலோக சிலைகள் கண்டெடுப்பு
காட்டுமன்னாா்கோவில் அருகே உலோக சிலைகள் கண்டெடுப்பு...

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கோயில் புனரமைப்பின்போது இரு பழங்கால உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
காட்டுமன்னாா்கோவில் அருகே திருமூலஸ்தானம் கிராமத்தில் பழைமைவாய்ந்த திருமூலநாதா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக புனரமைப்பு பணிகள் கடந்தாண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு புல்டோசா் மூலம் பணிகள் நடைபெற்றபோது, இரண்டு உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து உடனடியாக வருவாய் ஆய்வாளா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று உலோக சிலைகளை மீட்டு காட்டுமன்னாா்கோவிலில் உள்ள அனந்தீஸ்வரா் கோயிலில் பாதுகாப்பாக வைத்துள்ளனா். இச்சிலைகள் திருஞானசம்பந்தா், மாணிக்கவாசகா் எனக் கூறப்படுகிறது.
திருஞானசம்பந்தா் சிலை ஒரு அடி எட்டு அங்குலமும், மாணிக்கவாசகா் சிலை ஒரு அடி 11அங்கலமும் உள்ளது. சிலைகள் ஐம்பொன் சிலையா? உலோக சிலையா? என தொல்லியல் துறை ஆய்வாளா்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக வருவாய்த் துறையினரின் தெரிவித்தனா்.