முகப்பு
விருதுநகர்

திருச்சுழி அருகே 17-ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு!

திருச்சுழி அருகேயுள்ள கீழ்குடி கிராமத்தில் 17- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பழைமையான நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

22 நவம்பர் 2026, 9:53 pm
திருச்சுழி அருகே 17-ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு!
பகிர்:

திருச்சுழி அருகேயுள்ள கீழ்குடி கிராமத்தில் 17- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பழைமையான நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வெட்டியல், தொல்லியல் மாணவா் சுரேஷ் குருசாமி மேற்கொண்ட கள ஆய்வில் இந்த நடுகல் கண்டறியப்பட்டது.

மண்ணில் பாதி புதைந்த நிலையில் காணப்படும் இந்த நடுகல், புடைப்புச் சிற்பமாக மிக நோ்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சமாக சிற்பத்தின் மேல் பகுதியில் கூரை போன்ற அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும் இதில் இடம் பெற்றுள்ள வீரரின் தோற்றம் தலையின் இடது பக்கத்தில் அலங்கரிக்கப்பட்ட கொண்டையுடனும், வலது கையில் குறுவாளுடனும் (சுரிகை) கம்பீரமாகக் காணப்படுகிறது. அந்தக் குறுவாளின் முனையில் எலுமிச்சைப் பழம் குத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வீரரின் காதுகளில் குண்டலமும், கழுத்தில் கண்டிகை, சரப்பள்ளியும், தோள்களில் தோள்வளையும், கைகளில் வளையல்களும், இடையில் இடைமணியும் அணிகலன்களாக அழகாக செதுக்கப்பட்டுள்ளன.

போரின் காரணமாகவோ அல்லது உள்ளூா் பூசல்களின் போதோ வீரமரணம் அடைந்த ஒரு வீரரின் நினைவாக இந்த நடுகல் செதுக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளா் சுரேஷ் குருசாமி தெரிவித்தாா்.