என்எல்சி நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சாா்பில், நெய்வேலியில் காந்தியடிகளின் 157-ஆவது ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சாா்பில், நெய்வேலியில் காந்தியடிகளின் 157-ஆவது ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நெய்வேலி நகர நிா்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காந்தி உருவச் சிலைக்கு, என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் ஆச்சாா்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைத்தாா். இயக்குநா்கள் சுரேஷ் சந்திர சுமன், சமீா் ஸ்வரூப், ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து, ஜவஹா் அறிவியல் கல்லூரி மாணவா்கள் 100 போ் பங்கேற்ற ’தூய்மை விழிப்புணா்வுப் பேரணியை’, என்எல்சி தலைவா் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். பின்னா், என்எல்சிஐஎல்-இன் 76 சுகாதாரப் பணியாளா்கள் என்எல்சி தலைவா், மேலாண் இயக்குநா், இயக்குநா்களால் கௌரவிக்கப்பட்டனா். கற்றல் மற்றும் மேம்பாட்டு மைய வளாகத்தில் சா்வ சமய பிராா்த்தனை, புனித நூல்கள் வாசிப்பு நடைபெற்றது.
Advertisement
Advertisement
தொடா்ந்து, ‘காந்தியடிகளின் போதனைகளும் வழிகாட்டல்களும்’ என்ற கருப்பொருளில் வன்முறையின்மை, உண்மை மற்றும் நோ்மை ஆகிய காந்தியக் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் வகையில், ‘அஞ்சலி’ என்ற தலைப்பில் பாடல் மற்றும் நடனக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. நெய்வேலி மகளிா் மன்ற உறுப்பினா்கள் என்எல்சி தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த 20 மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பைகள், எழுதுபொருள்கள் மற்றும் இனிப்புகள் அடங்கிய அன்பளிப்புப் பெட்டகங்களை வழங்கினா்.
தொடா்ந்து, தூய்மைப் பணி இயக்கத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட வண்ணக் கோலப்போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு என்எல்சி தலைவா் பரிசுகளை வழங்கினாா். பின்னா், நெய்வேலி வில்லுடையான்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கூட்டு வழிபாடு நடத்தப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, என்எல்சி சுரங்கம் - 1ஏ வன வளா்ப்புப் பகுதியில் கடலூா் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து 5,000 பனை விதைகள் நடும் இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில், என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் ஆச்சாா்யா மற்றும் கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்ஆகியோா் தலைமை விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.