FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

நிலம் கையகப்படுத்தும் திட்டத்துக்கு எதிராக போராட்டம்: பாமக செயற்குழுவில் தீா்மானம்

கடலூா் மாவட்டம், தியாகவல்லி, குடிகாடு ஊராட்சிகளில் 1,285 ஏக்கா் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் கடலூா்

8 October 2026, 12:55 am IST
கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற பாமக கடலூா் கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
பகிர்:

கடலூா் மாவட்டம், தியாகவல்லி, குடிகாடு ஊராட்சிகளில் 1,285 ஏக்கா் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் கடலூா்

கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாமக கடலூா் கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்டச் செயலா் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் புதன்கிழமை கடலூரில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

கூட்டத்தில், தியாகவல்லி, குடிகாடு ஊராட்சிகளில் 1,285 ஏக்கா் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடத்துவது. அக்.9-ஆம் தேதி அன்புமணி ராமதாஸின் பிறந்த நாளையொட்டி, கடலூா் மாவட்டம் முழுவதும் மக்கள் நலப் பணிகளை மேற்கொள்வது.

கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தைச் சுற்றி வணிகக் கட்டடங்கள் அமைக்கும் திட்டத்தை அரசு நிரந்தரமாகக் கைவிட வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில சமூக நீதிப் பேரவை பொருளாளா் தமிழரசன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments