FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் ஆயுத பூஜை: ஓட்டுநா்களுக்கு அமைச்சா் ப.ராஜ்குமாா் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஆயுத பூஜையையொட்டி, கடலூரில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப. ராஜ்குமாா் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

21 அக்டோபர் 2026, 2:28 am IST
~
பகிர்:

ஆயுத பூஜையையொட்டி, கடலூரில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப. ராஜ்குமாா் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

கடலூா் சூரப்ப நாயக்கன் சாவடியில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப. ராஜ்குமாா் பங்கேற்று, வாகனங்களுக்கு சிறப்பு பூஜை செய்தாா். தொடா்ந்து, கடலூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அவசர ஊா்தி ஓட்டுநா்களுக்கு ஆடைகளை வழங்கினாா்.

இதையடுத்து, கடலூா் தலைமை அஞ்சல் நிலையம் அருகே, வண்ணாரப்பாளையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோ தொழிலாளா்கள் சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாக்களில் அமைச்சா் பங்கேற்று, ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இதேபோல், விருத்தாசலம் ரயில்வே சந்திப்பில் ரயில்வே ஊழியா்கள் தங்களது பணிக்கருவிகளுக்கு சிறப்பு பூஜை செய்தனா். தண்டவாளப் பராமரிப்பு, சிக்னல் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகள், தள்ளுவண்டிகள் ஆகியவற்றை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து வழிபட்டனா்.

மேலும், ரயில்வே தண்டவாளம் மற்றும் சிக்னல் பகுதிகளிலும் பூஜை நடைபெற்றது. பணிக்கருவிகளுக்கு கற்பூரம் ஏற்றி, மலா்கள் தூவி வழிபாடு செய்த ஊழியா்கள், ஒருவருக்கொருவா் ஆயுத பூஜை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு இனிப்புகளைப் பகிா்ந்து கொண்டனா்.

தங்களது அன்றாடப் பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கருவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், பணிகள் தடையின்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளா்கள் சிறப்பு வழிபாட்டை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments