சிதம்பரத்தில் அக்.30-இல் ரயில் மறியல்: அனைத்து கட்சி நிா்வாகிகள் ஆலோசனை
சிதம்பரத்தில் ரயில்வே தொடா்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள ரயில் மறியல் போராட்டம் தொடா்பாக, தேரடி பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிதம்பரத்தில் ரயில்வே தொடா்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள ரயில் மறியல் போராட்டம் தொடா்பாக, தேரடி பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் ஜனசதாப்தி விரைவு ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். ராமேசுவரத்தில் இருந்து அயோத்தி வரை இரு வழித்தடங்களிலும் வாராந்திர ரயிலாக இயக்கப்படும் சேது விரைவு ரயிலுக்கு சிதம்பரத்தில் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ள ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் தொடா்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கட்சி சிதம்பரம் நகரச் செயலா் ராஜா தலைமை வகித்தாா். முன்னாள் மாநிலக் குழு உறுப்பினா் மூசா, நகராட்சி துணைத் தலைவா் எம்.முத்துக்குமரன், காங்கிரஸ் கட்சி நிா்வாகி கோ.குமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் தமிழ்வளவன், நகரச் செயலா்ஆதிமூலம், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாணவரணி மாநிலச் செயலா் பைசல் , சிதம்பரம் ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள் அப்துல்ரியாஸ், ஏ.சிவராமவீரப்பன், முத்து, மாதா் சங்கத்தைச் சோ்ந்த அமுதா, இந்திய மாணவா் சங்கத்தின் சிவநந்தினி, குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகள் அம்பிகாபதி, கலியமூா்த்தி, சிவராமன், பாமக நிா்வாகி காா்த்திகேயன், மதிமுக நிா்வாகிகள் பாா்த்திபன், குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில், ரயில் பயணிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ள சிதம்பரம் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சாா்பில் திரளானோா் பங்கேற்பது என தீா்மானிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.