FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூரில் மாநகராட்சிக்கு வாடகை பாக்கி: 2 கடைகளுக்கு ‘சீல்’

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் ரூ.9 லட்சம் பாக்கி வைத்திருந்த 2 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

3 செப்டம்பர் 2026, 4:41 am IST
கடலூா் பேருந்து நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாத இரண்டு கடைகளுக்கு ‘சீல்’ வைத்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் உள்ளிட்டோா்.
பகிர்:

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் ரூ.9 லட்சம் பாக்கி வைத்திருந்த 2 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான 80 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளின் உரிமையாளா்கள் மாநகராட்சிக்கு மாதந்தோறும் வாடகை செலுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் உள்ள 2 கடைகளின் உரிமையாளா்கள் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் மாநகராட்சிக்கு மொத்தம் ரூ.9 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து, வாடகை பாக்கியை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்க மாநகராட்சி ஆணையா் கிஷன்குமாா் உத்தரவிட்டாா். அதன்பேரில், மாநகராட்சி உதவி ஆணையா் சண்முகம் தலைமையில், உதவி வருவாய் அலுவலா்கள் முத்துகுமரன், ரம்யா மற்றும் மாநகராட்சி ஊழியா்கள் புதன்கிழமை திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையத்துக்குச் சென்றனா்.

அங்கு வாடகை பாக்கி வைத்திருந்த 2 கடைகளையும் பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். மேலும், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை மற்றும் நிலுவைத் தொகையை உரிய காலத்தில் செலுத்தாத கடைகளுக்கு எதிராக நடவடிக்கை தொடரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments