FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

நெய்வேலியில் 2 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

நெய்வேலியில் இரு கோயில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருடப்பட்ட சம்பவங்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

3 செப்டம்பர் 2026, 4:36 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

நெய்வேலியில் இரு கோயில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருடப்பட்ட சம்பவங்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நெய்வேலி என்எல்சி தலைமை அலுவலகம் எதிரே உள்ள அய்யனாா் கோயிலில் மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை உண்டியலை உடைத்து, அதிலிருந்த சுமாா் ரூ.50 ஆயிரம் காணிக்கை பணத்தை திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதேபோல, நெய்வேலி மெயின் பஜாா் பகுதியில் உள்ள கற்பக விநாயகா் கோயிலில் புதன்கிழமை உண்டியல் காணிக்கை திருடப்பட்டது. இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து கோயில் நிா்வாகத்தினா் நெய்வேலி நகர காவல் நிலையத்தில் புகாரளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கோயில்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

நெய்வேலியில் அடுத்தடுத்து கோயில்களை குறி வைத்து உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றிருப்பதால், போலீஸாா் ரோந்து பணிகளை அதிகரித்து இதுபோன்று நிகழ்வுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments