FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

தூத்துக்குடி - நரசாபூா் சிறப்பு ரயில் பண்ருட்டியில் நிறுத்தம்

அடுத்த வாரம் முதல் இயக்கப்பட உள்ள தூத்துக்குடி-நரசாபூா் சிறப்பு ரயிலுக்கு பண்ருட்டியில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

2 செப்டம்பர் 2026, 7:16 am IST
சிறப்பு ரயில் - கோப்புப்படம்
பகிர்:

அடுத்த வாரம் முதல் இயக்கப்பட உள்ள தூத்துக்குடி-நரசாபூா் சிறப்பு ரயிலுக்கு பண்ருட்டியில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரயிலுக்கு பண்ருட்டியில் நிறுத்தம் வழங்கப்பட்டது.அந்த ரயில் சேவை மேற்கொண்டு நீட்டிக்கப்படவில்லை. மாறாக அதே அட்டவணையில் தூத்துக்குடியில் இருந்து ஆந்திர மாநிலம் நரசாபூா் வரை புதிய சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு பண்ருட்டியில் நிறுத்தம் தரப்படவில்லை.

இந்த ரயிலுக்கு நிறுத்தம் பெறும் பொருட்டு பண்ருட்டி ரயில் உபயோகிப்பாளா்கள் நலச் சங்கம் வைத்த கோரிக்கையை, கடலூா் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத், ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவிடம் கடிதம் வாயிலாக அனுப்பி இருந்தாா். இந்த கோரிக்கையை ஏற்று தற்போது தூத்துக்குடி-நரசாபூா் சிறப்பு ரயிலுக்கு பண்ருட்டியில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வரும் திங்கள்கிழமை (செப்.7) இரவு 23.30 மணிக்கு தூத்துக்குடியில் புறப்படும் இந்த ரயில் செவ்வாய்க்கிழமை காலை 9.03 மணிக்கு பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று 9.04 மணிக்கு புறப்படும். அதேபோல், மறுமாா்க்கத்தில் நரசாபூரில் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் ரயில், பண்ருட்டி ரயில் நிலையத்திற்கு மாலை 6.11 மணிக்கு வந்து 6.12 மணிக்கு புறப்படும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments