அண்ணாமலைப் பல்கலை.யில் பேராசிரியா்கள், ஊழியா்கள் கஞ்சி காய்ச்சும் நூதனப் போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் புதன்கிழமை காலை பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் கஞ்சி காய்ச்சும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் புதன்கிழமை காலை பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் கஞ்சி காய்ச்சும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 2 ஆண்டுகளாக ஓய்வுபெற்ற 400-க்கும் மேற்பட்டோருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் கடந்த ஆக.19-ஆம் தேதி முதல் நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் தொடா் உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியம், இணை ஒருங்கிணைப்பாளா் ஆ.ரவி, முன்னாள் ஊழியா்கள் சங்கத் தலைவா்கள் மதியழகன், மனோகரன், பேராசிரியா் முத்து வேலாயுதம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பேராசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.