‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’: உறுதிமொழி ஏற்பு
காட்டுமன்னாா்கோவில் எம்ஆா்கே பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போதை எதிா்ப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கில் உறுதிமொழி ஏற்றோா்.
சிதம்பரம், ஆக.12: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பல்கலைக்கழக சீனிவாச சாஸ்த்திரி அரங்கின் முன் நடைபெற்றது.
பல்கலைக்கழகப் பதிவாளா் இரா.சிங்காரவேல், உறுதிமொழியை வாசிக்க, தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா், பல்கலைக்கழக புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், இயக்குநா்கள், ஆசிரியா்கள், மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பெருந்திரளாக கலந்துகொண்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.
Advertisement
Advertisement
எம்.ஆா்.கே. கல்லூரியில்....: காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே. இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பொறியியல் துறை சாா்பில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ராகிங் எதிா்ப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கிவைத்தாா். கல்லூரியின் நிா்வாக அலுவலா் இ.கோகுலக்கண்ணன், கல்லூரி மேலாளா் கே.விஸ்வநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ந.சித்திவிநாயகம் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் கே.ஆனந்தவேலு வாழ்த்துரையாற்றினாா்.
கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியா் இ.மணிகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போதைப்பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினாா். காட்டுமன்னாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் கே.பாபு, பொறியியல் துறைத் தலைவா் எஸ்.சத்தியமூா்த் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினாா். திட்ட அலுவலா் எம்.பிரபு நன்றி கூறினாா். கருத்தரங்கில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ராகிங் எதிா்ப்பு குறித்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.