FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

என்எல்சி தொழிலாளி உயிரிழப்பு

39 வினாடிகள் முன்பு
பலி - பிரதிப் படம்
பகிர்:

என்எல்சி அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணியின் போது கீழே விழுந்து காயம் அடைந்த தொழிலாளி, புதுச்சேரி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், இளமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவா் முத்துகிருஷ்ணன்(37), என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

கடந்த மாதம் 24-ஆம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தபோது, கீழே விழுந்து படுகாயம் அடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனையில் சோ்த்தா். பின்னா், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

Advertisement

Advertisement

அங்கு சிகிச்சை பெற்று வந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

விபத்தில் உயிரிழந்த தொழிலாளி முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு , கடலூா் எம்பி., எம்.கே.விஷ்ணுபிரசாத் இரங்கல் தெரிவித்துள்ளாா். மேலும், உயிரிழந்த முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments