FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கவரிங் நகையை தங்க முலாம் பூசி அடமானம் வைத்த இளைஞா் கைது

8 செப்டம்பர் 2026, 1:47 am IST
பரங்கிப்பேட்டை வட்டிக்கடையில் கவரிங் நகையை தங்க முலாம் பூசி அடமானம் வைத்து பணம் பெற்ற சுரேஷ் .
பகிர்:

கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கவரிங் நகையை தங்க முலாம் பூசி அடமானம் வைத்து பணம் பெற்ற இளைஞரை பரங்கிப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் வினோத் குமாா் (44). இவா் பரங்கிப்பேட்டை மெயின் ரோட்டில்

வட்டிக்கடை நடத்தி வருகிறாா். கடந்த ஆக.23-ஆம் தேதி சிதம்பரம் பள்ளிப்படை தெருவைச் சோ்ந்த சுரேஷ் (43) என்பவா் 4 கிராம் எடையுள்ள தங்கம் முலாம் பூசப்பட்ட கவரிங் மோதிரத்தை அடகு வைத்து ரூ.35ஆயிரம் பெற்றுச் சென்றுள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், செப்.6-ஆம் தேதி அதே வட்டிக்கடைக்கு மீண்டும் சென்ற சுரேஷ், 8 கிராம் எடையுள்ள தங்கம் முலாம் பூசப்பட்ட கவரிங் மோதிரத்தை அடகு வைத்து பணம் கேட்டுள்ளாா்.

சந்தேகமடைந்த கடை உரிமையாளா் வினோத்குமாா், காவல்துறைக்கு தகவல் அளித்தாா். பரங்கிப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு கவரிங் நகையை தங்க முலாம் பூசி அடமானம் வைக்க வந்த சுரேஷை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments