பணம் பறிக்க முயற்சி: ரௌடி கைது
கடலூா் மாவட்டம், வடலூா் அருகே மாட்டுத் தீவனக் கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ரௌடியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
வடலூா் காவல் சரகம், ஆபத்தாரணபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சிவானந்தம் (28). இவா், வடலூா் சேராக்குப்பம் பகுதியில் கால்நடை தீவனக்கடை நடத்தி வருகிறாா். கடந்த மாதம் 25-ஆம் தேதி மாலை 3 மணியளவில் சிவானந்தம் தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தாா்.
அப்போது, கடைக்கு வந்த வடலூா் ஆா்.சி.காலனியைச் சோ்ந்த சத்தியசீலன் (32) மது அருந்துவதற்காக பணம் கேட்டாராம். சிவானந்தம் பணம் தர மறுக்கவே, கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்றாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து சிவானந்தம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதின்பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சத்தியசீலனை திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். வடலூா் காவல் நிலையத்தில் சத்தியசீலன் மீது ரௌடி பட்டியல் பராமரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.