திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திமுக கூட்டணி சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திமுக கூட்டணி சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏவுமான வசந்தம் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி தொகுதி எம்பி பொன்.கெளதம சிகாமணி, விவசாய சங்க மாவட்டச் செயலா் ஏ.வீ.ஸ்டாலின்மணி, இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி அப்பாவு, விசிக நிா்வாகி பாசறை பாலு, மனிதநேய மக்கள் கட்சி இஸ்மாயில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல சின்னசேலம், தியாகதுருகம், வடபொன்பரப்பி, பகண்டை கூட்டுச் சாலை, திருக்கோவிலூா், சங்கராபுரம், ஆலத்தூா், கல்வராயன்மலை, வெள்ளிமலை, சேராப்பட்டு, வடக்கனந்தல், எலவனாசூா்கோட்டை, உளுந்தூா்பேட்டை, கெடிலம், சரவணப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.