FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நூல் அரங்கம்

எமோஷனல் இன்டெலிஜென்ஸ்

'உன் உணர்வுகளை நீ ஆள்கிறாயா, இல்லை உணர்வுகள் உன்னை ஆள்கின்றனவா?' என்ற கேள்வியை சுற்றி வருகிறது இந்தப் புத்தகம்.

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 6:27 pm IST
பகிர்:

எமோஷனல் இன்டெலிஜென்ஸ்- இட்லியாக இருங்கள் 4 (உணர்வால் முடியும்) -சோம.வள்ளியப்பன்; பக்.240; ரூ.270; கிழக்கு பதிப்பகம், சென்னை 600 014. ✆ 95000 45609.

நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளில் 90% நம் உணர்வுகளை சரியாக கையாளாததால் வருவதுதான். கோபத்தில் எடுக்கும் முடிவு, பயத்தில் தவறவிடும் வாய்ப்பு, சோகத்தில் இழக்கும் நட்பு- இவை அனைத்துக்கும் தீர்வு சொல்ல வந்திருக்கிறது இந்த உணர்வால் முடியும் நூல்.

'இட்லியாக இருங்கள்' தொடர்கள் மூலம் ஏற்கெனவே ஏராளமான வாசகர்களின் மனதை வென்ற சோம.வள்ளியப்பன், இந்த 4-ஆவது புத்தகத்தில் உணர்வுகள் என்ற ஆழமான விஷயத்தை மிக எளிமையாக சொல்லியிருக்கிறார்.

Advertisement

Advertisement

'உன் உணர்வுகளை நீ ஆள்கிறாயா, இல்லை உணர்வுகள் உன்னை ஆள்கின்றனவா?' என்ற கேள்வியை சுற்றி வருகிறது இந்தப் புத்தகம்.

ஒவ்வோர் உணர்வுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அதைப் புரிந்து கொண்டால் அதுவே நமது சக்தியாக மாறும் என்பதே எழுத்தாளரின் வாதம்.

எளிமையான நடை, வாடிக்கையாளர்கள், நண்பர்கள், தன் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை வைத்து சொல்லும்போது மிகவும் நெருக்கமாக உணர முடிகிறது. கனமான உளவியல் கருத்துகள்கூட அன்றாட வாழ்வின் எளிய உதாரணங்களுடன் அழகாக சொல்லப்பட்டிருக்கின்றன.

வெறும் அறிவுரைகள் இல்லாமல் வாசகர்கள் உடனே பின்பற்றக்கூடிய நடைமுறை வழிமுறைகளை தந்திருப்பது இந்நூலின் பலம்.

உணர்வுகளை அடக்காதே, அவற்றைப் புரிந்து கொள். அப்போதுதான் அவை உனக்கு நண்பனாகும். எந்த உணர்ச்சியாக இருந்தாலும் அது அதிகமாகிவிட்டால் அறிவு தீபம் அணைந்துவிடும். உணர்வின் இருட்டாட்சிதான் நடைபெறும் போன்ற வரிகள் கவர்ந்தவை.

சின்ன விஷயத்துக்குகூட கோபம் கொள்பவர்களுக்கு இந்தப் புத்தகம் பதில் சொல்லும். உணர்வால் முடியும் என்பது வெறும் புத்தகம் அல்ல. இது ஒரு பயிற்சி கையேடு. வாழ்க்கையைப் புரிந்து கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments