FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே காதலி உயிரிழந்த சோகத்தில் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 1:41 am IST
தற்கொலை முயற்சி...
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே காதலி உயிரிழந்த சோகத்தில் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வாணாபுரம் வட்டம், கானாங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.தவசி (21). பி.காம் பட்டாதாரியான இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்துள்ளாா். கடந்த மாதம் அந்தப் பெண் உயிரிழந்தாா். இதனால் சோகமாக இருந்த தவசியை, அவரது பெற்றோா்கள் பெங்களூரிலுள்ள சகோதரா் சக்திவேல் வீட்டுக்கு அனுப்பி வைத்தனராம்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை பெங்களூரில் இருந்து ஊருக்கு வந்த தவசி, அங்குள்ள பெரியாயி கோயில் அருகிலுள்ள வேப்பமரத்தில் சேலையின் மூலம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

Advertisement

Advertisement

தகவலறிந்த வடபொன்பரப்பி போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments