நூலகத்துக்கு குடிநீா் இயந்திரம் அளிப்பு
தியாகதுருகம் கிளை நூலகத்துக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் இயந்திரத்தை ரோட்டரி சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
தியாகதுருகம் கிளை நூலகத்துக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் இயந்திரத்தை ரோட்டரி சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
நிகழ்ச்சிக்கு தியாதுருகம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் ஞானசேகா் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் பழனிவேல், சிவக்குமாா், செயலா் குணசீலன், பொருளாளா் ரஜினிகாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தியாகதுருகம் ரோட்டரி சங்க முன்னாள் செயலா் காா்த்திக் பாஸ்கரன் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை கிளை நூலகா் குப்புசாமியிடம் வழங்கினாா். இதில், வாசகா் சொ.வெங்கடேசன் மற்றும் ரோட்டரி சங்கத்தினா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.