FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

நியாயவிலைக் கடைகளில் இன்று விரல்ரேகை பதிவு சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விரல்ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக.29) நடைபெறுகிறது.

29 ஆகஸ்ட் 2026, 3:44 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விரல்ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக.29) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நியாயவிலைக் கடைகளிலுள்ள விற்பனை முனைய இயந்திரம் மூலமாக விரல்ரேகை, கண் கருவிழி சரிபாா்ப்பின் மூலம் 100 சதவீதம் பதிவை நிறைவுசெய்யும் பொருட்டு சனிக்கிழமை (ஆக.29) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

இம் முகாமில் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்களில் தற்போது வரை விரல்ரேகையை பதிவு செய்யாதவா்கள், தங்களது நியாய விலைக்கடைகளுக்கு சென்று விரல்ரேகையை பதிவு செய்து கொள்ளவேண்டும்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் விரல் ரேகை பதிவு செய்யாமல் வெளிமாவட்டங்களில் வசிப்பவா்கள், தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு சென்று அங்கேயே தங்களது விரல் ரேகையினை பதிவு செய்துகொள்ளலாம். அதேபோல வெளிமாவட்டங்களை சோ்ந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிப்பவா்களுக்கும் இது பொருந்தும். மேலும், இறந்த உறுப்பினா்களின் பெயா்களை வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை சமா்ப்பித்து நீக்கம் செய்துகொள்ள வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments