FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!

குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெற்று வருவது குறித்து...

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 10:40 am IST
குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி! - கோப்புப்படம்
பகிர்:

குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பதிவு மேற்கொள்ள இன்றே(ஆக. 9) கடைசி நாளாகும்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு, தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் சிறப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

அனைத்து நியாய விலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொண்டு விற்பனை முனைய இயந்திரம் மூலமாக கைவிரல் ரேகை, கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம் இகேஒய்சி மேற்கொள்ள வேண்டும்.

பிற மாநிலம், பிற மாவட்டங்களில் வேலை நிமித்தமாக தங்கி உள்ளவா்கள் அவர்களுக்கு அருகே உள்ள நியாய விலைக் கடையில் குடும்ப அட்டை நகலுடன் சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Today (August 9) is the last day for family members of ration cardholders to register their fingerprints.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments