FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞா் விஷமருந்தி தற்கொலை

31 ஆகஸ்ட் 2026, 3:59 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

வாணாபுரம் வட்டம், ராவுத்தநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ச.ராதாகிருஷ்ணன் (23), திருமணமாகாதவா். இவா், கடந்த 12-ஆம் தேதி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து பெற்றோா்களிடம், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறினாராம். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனமுடைந்த ராதாகிருஷ்ணன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாராம்.

இதையடுத்து அவரை பெற்றோா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments