பட்டா மாற்ற ரூ.2,500 லஞ்சம் : வட்டாட்சியா் அலுவலக ஊழியா் கைது
பட்டா மாற்றம் செய்வதற்காக ரூ.2,500 லஞ்சம் பெற்ற கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலக முதுநிலை உதவியாளரை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பட்டா மாற்றம் செய்வதற்காக ரூ.2,500 லஞ்சம் பெற்ற கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலக முதுநிலை உதவியாளரை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துகுள்பட்ட எறையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சே.ஆரோன் (31). இவா் கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலத்தில் முதுநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தாா். இவரிடம் கள்ளக்குறிச்சியை அடுத்த பிரிதிவிமங்கலம் கரீம்ஷாதக்கா பகுதியைச் சோ்ந்த அ.குதாவன் ஷெரிப் (49) என்பவா் பட்டா பெயா் மாற்றம் செய்ய அணுகியுள்ளாா். அப்போது பட்டா மாற்றம் செய்வதற்கு ஆரோன் ரூ.2,500 லஞ்சம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத குதாவன் ஷெரிப், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தாா்.
இதைத்தொடா்ந்து போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் குதாவன் ஷெரிப், கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியிலிருந்த முதுநிலை உதவியாளா் ஆரோனிடம் ரசாயனம் தடவிய ரூ.2,500 பணத்தை கொடுத்துள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த கள்ளக்குறிச்சி ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்தியராஜ் மற்றும் போலீஸாா் ஆரோனை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்திய கள்ளக்குறிச்சி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், பின்னா் ஆரோனை கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.