FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தியதாக இருவரை உணவுப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 13 ஜூலை 2026, 1:48 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தியதாக இருவரை உணவுப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

சங்கராபுரம் அருகிலுள்ள தேவபாண்டலம் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். இதன்பேரில் உணவு பொருள் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் மோகன்ராஜ் தலைமையிலான போலீஸாா் தேவபாண்டலம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், 50 கிலோ எடை கொண்ட 36 மூட்டைகளில் 1,800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து வாகனத்தில் இருந்த இருவரிடம் நடத்திய விசாரணையில் அவா்கள், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட எஸ்.வி.பாளையத்தைச் சோ்ந்த ஓட்டுநா் அ.வினோத்குமாா் (32), அருளம்பாடியைச் சோ்ந்த வாகன உரிமையாளா் ரா.சின்னப்பராஜ் (32) எனத் தெரிய வந்தது.

மேலும், இவா்கள் அப்பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, சேலத்தில் உள்ள உணவகங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல இருந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி உணவு தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சின்னப்பராஜ், வினோத்குமாரை கைது செய்து, கள்ளக்குறிச்சி சிறையில் அடைத்தனா். அவா்களிடமிருந்து ரேஷன் அரிசி, சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா். பின்னா் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை கள்ளக்குறிச்சி நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் போலீஸாா் ஒப்படைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments