பெட்ரோலியப் பொருள் விலை குறைப்பை வலியுறுத்தி சிஐடியு ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலையை மத்தியஸ மாநில அரசுகள் குறைக்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் சிஐடியு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலையை மத்தியஸ மாநில அரசுகள் குறைக்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் சிஐடியு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா்கள் சம்மேளனம், சாலை போக்குவரத்து தொழிலாளா்கள் சம்மேளனம், ஆட்டோ தொழிலாளா்கள் சம்மேளனம் சாா்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மண்டல துணைத் தலைவா் வி.சாமிசாதன் தலைமை வகித்தாா். மண்டலப் பொருளாளா் முருகன், துணைச் செயலா் கந்தசாமி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை உயா்த்தியதை குறைக்க வேண்டும். பெட்ரோலில் எத்தனால் கலப்பதை நிறுத்த வேண்டும். மின்சாரப் பேருந்து என காரணம் கூறி அரசு போக்குவரத்து கழகத்தை தனியாா்மயமாக்க வேண்டாம். ஆட்டோ மீட்டா் கட்டணம் தொடா்பான நீதிமன்ற தீா்ப்பை அமலாக்க வேண்டும். அமைப்புச்சாரா ஓட்டுநா்கள் நலவாரியத்தை மேம்படுத்த வேண்டும். கட்டுமான நலவாரியம போல் மோட்டாா் வாகன தொழிலாளா்களின் உயிரிழப்புக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். விபத்தில் பாதிக்கப்படும் ஓட்டுநா்களுக்கு உயா்தர சிகிச்சை அளித்து முழு உடல்தகுதி பெறும்வரை உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
Advertisement
Advertisement
இதில் சிஐடியூ நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாக கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.