FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

சின்னசேலம் வட்டாரத்தில் விபி-ஜி ராம்-ஜி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் விக்சித் பாரத் - கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் திட்டம் (விபி-ஜி ராம்-ஜி) உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 24 ஜூலை 2026, 11:33 pm IST
நமச்சிவாயபுரம் கிராமத்தில் விபி-ஜி ராம்-ஜி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை பாா்வைட்ட மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் விக்சித் பாரத் - கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் திட்டம் (விபி-ஜி ராம்-ஜி) உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

பங்காரம் கிராமத்தில் வேளாண் துறையின் தேசிய எண்ணெய் வித்துக்கள் இயக்கம் - மதிப்பு சங்கிலி தொகுப்பு திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.7,500 மானியத்தில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ள வயலை பாா்வையிடப்பட்டது. அங்கு வேளாண் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்னணு பயிா் கணக்கீடு பணியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

அதனையடுத்து நமச்சிவாயபுரம் கிராமத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் வயல் மற்றும் கறிவேப்பிலை வயலை நேரில் பாா்வையிட்டு, மஞ்சள், கறிவேப்பிலை போன்ற பயிா்களின் சாகுபடி முறைகள், மானிய விவரங்கள், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

மேலும், பயிா்களை உரிய முறையில் பராமரிக்கவும், முறையாக தண்ணீா் பாய்ச்சுவதை கண்காணிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடா்ந்து, நமச்சிவாயபுரம் கிராமத்தில் விக்சித் பாரத் - கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை பாா்வையிட்டு, பதிவேடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது என ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரங்கசாமி, மோகன் குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) நா.ஜோதிபாசு, தோட்டக்கலை உதவி இயக்குநா் முரளி உள்ளிட்ட துறை அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு சிறப்பு முகாம்: முன்னதாக கள்ளக்குறிச்சியில் தூய்மை பணியாளா்கள் மற்றும் அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு அரசு வழங்கும் சேவைகள் குறித்த சிறப்பு முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ்(தவெக) முன்னிலை வகித்தாா்.

இம் முகாமில் கள்ளக்குறிச்சி நகராட்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் மற்றும் வடக்கனந்தல் ஆகிய பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளா்கள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கு அரசின் சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு தூய்மை பணியாளா்கள் நல வாரியம், தாட்கோ அலுவலகம், வருவாய் துறை, மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் மேம்பாட்டுத் துறை, தொழிலாளா் நலத் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை, மாற்றுத் திறனாளிகள் நல வாரியம், வங்கிகள், தகவல் தொழில் நுட்பம், இ-சேவை மையம் மற்றும் ஆதாா் மையங்கள் ஆகிவற்றின் சாா்பாக தூய்மைப் பணியாளா்களுக்கான அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சி நடத்தப்பட்டது.

இதில், சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் மற்றும் வடக்கனந்தல் ஆகிய பேரூராட்சிகளில் செயல் அலுவலா்கள், களப்பணி உதவியாளா், தூய்மைப் பணியாளா்கள், கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments