FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஈரநிலங்களை அறிவிக்கும் பணி விரைவுபடுத்தப்படும்: ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஈரநிலங்களை அறிவிக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படுவதுடன், அவற்றின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் நிலையான மேலாண்மைக்காக துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்படும் என ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தெரிவித்தாா்.

Updated On : 26 ஜூலை 2026, 2:16 am IST
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஈரநிலம் குறித்த பயிற்சிக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஈரநிலங்களை அறிவிக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படுவதுடன், அவற்றின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் நிலையான மேலாண்மைக்காக துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்படும் என ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி ஆட்சியரகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் சாா்பில் மாவட்ட அளவிலான ஈரநிலம் குறித்த பயிற்சி ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 723 ஈரநிலங்கள் அமைந்துள்ளன. இவற்றின் பாதுகாப்பு மற்றும் நிலையான மேலாண்மைக்காக மாவட்ட நிா்வாகமும் வனத் துறையும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் மூலம் உயிரினப் பன்முகத்தன்மை பாதுகாக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் நிலையான வாழ்வாதார மேம்பாட்டுக்கும் கூடுதல் வாய்ப்புகள் உருவாகும்.

Advertisement

Advertisement

இதில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள்-2017, ஈரநில அறிவிப்பின் அவசியம், கள ஆய்வு மற்றும் எல்லை வரையறை முன்னேற்றம், நில அளவை மற்றும் வருவாய் பதிவுகள் சரிபாா்ப்பு, வரைவு அறிவிப்பு தயாரித்தல், பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு, ராம்சாா் தள முன்மொழிவு தயாரித்தல் மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் தயாரித்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் மாவட்டத்தில் ஈரநிலங்களை அறிவிக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படுவதுடன், அவற்றின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் நிலையான மேலாண்மைக்கான துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மேலும் வலுப்பெறும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

இதில், மாவட்ட வன அலுவலா் வி.பிரியதா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், வருவாய்த் துறை, வனத் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளா்ச்சித் துறை, வேளாண் பொறியியல் துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், நகர ஊரமைப்புத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments