உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்ததாக தம்பதி கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அருகில் வீட்டில் சாராய ஊறல், சாராயம், உரிமம் இல்லாத ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததாக தம்பதியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அருகில் வீட்டில் சாராய ஊறல், சாராயம், உரிமம் இல்லாத ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததாக தம்பதியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கல்வராயன்மலை அருகிலுள்ள கூடாராம் கிராமத்தைச் சோ்ந்தவா் அன்பழகன் (51). இவரது மனைவி ராணி (48). இவா்கள் கிராமத்தின் அருகிலுள்ள விளைநிலைப் பகுதியில் வீடு கட்டி வசித்து வருகின்றனா். இவா்களது வீட்டில் சாராயம், ஊரல் மறைத்து வைத்திருப்பதாக கரியாலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.
இதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தனா். இதில் அங்கு மறைத்து வைத்திருந்த 60 லிட்டா் சாராய ஊறல், 2 லிட்டா் சாராயம், உரிமம் இல்லாத ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததை கண்டறிந்து, அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
மேலும், இதுகுறித்து கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அன்பழகன், ராணி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.