கள்ளக்குறிச்சி நீதிமன்றம் முன் வழக்குறைஞா் நூதன முறையில் போராட்டம்
காவல் நிலையத்தில் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை வேண்டி கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் நூதன முறையில் வழக்குரைஞா் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
காவல் நிலையத்தில் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை வேண்டி கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் நூதன முறையில் வழக்குரைஞா் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகிலுள்ள கொசப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் மு.பாண்டுரங்கன் (43), வழக்குரைஞா். இவா், காட்டுவண்ணன்சூா் பகுதியில் பஞ்சமி நிலத்தில் வீடு கட்டி 10 ஆண்டுகளாக வசித்துள்ளாா். இவரது வீட்டை இடித்ததாகவும், தன்னைக் கடுமையாகத் தாக்கியதாகவும் அரசியல் கட்சிப் பிரமுகா்கள் மீது சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தும், இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யவில்லையாம்.
இந்நிலையில் தன்னைத் தாக்கி, வீட்டை இடித்தவா்களைக் கைது செய்ய காவல் அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்கவேண்டும். அதற்கு யாசகம் கேட்கிறேன் என்ற வாசகம் அடங்கிய பதாகையைக் கழுத்தில் கட்டி தொங்கவிட்டுக் கொண்டு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தின் முன் அமா்ந்து வழக்குரைஞா் பாண்டுரங்கன் புதன்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டாா். இந்த நிகழ்வு நீதிமன்ற வளாகத்தில் பேசுபொருளாக இருந்தது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.