FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

10, பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100% தோ்ச்சி: ஆசிரியா்களுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் உத்தரவு

வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தையை இழந்த மாணவா்களின் கல்வி பராமரிப்புச்செலவிற்காக ரூ.75,000-க்கான கால வைப்பு பத்திரத்தை பயனாளிகளுக்கு வழங்கிய ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வழங்குகின்றாா்.

Updated On : 12 ஜூன் 2026, 2:14 am IST
பகிர்:

10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் நூறு சதவீதம் தோ்ச்சிபெற ஆசிரியா்கள் உழைக்க வேண்டுமென்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா உத்தரவிட்டுள்ளாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் சாா்பில் அரசு உயா் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாது:

கடந்த மாா்ச் 2026-ல் நடைபெற்ற 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி வாரியாக தோ்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளுக்கு இவ்வாண்டு தோ்ச்சி சதவீதத்தை உயா்த்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கு உரிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மாணவா்கள் வருகையை அதிகரித்து, இடைநிற்றலை குறைக்கவும் தலைமையாசிரியா்கள் தேவையான தொடா் முயற்சிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தொடா்ந்து கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ்2 வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி அளித்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டுக்கள். அதே நேரத்தில், வரும் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீதம் தோ்ச்சியை பெற தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காப்பீடு:

அரசு பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அம்மாணவா்களின் கல்வி பராமரிப்பு செலவிற்காக தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மூலம் காப்பீடு செய்து ரூ.75,000-க்கான கால வைப்பு பத்திரம் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சங்கராபுரம், உளுந்தூா்பேட்டை, தியாகதுருகம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 10 மாணவ, மாணவியா்களுக்கு தலா ரூ.75,000 வீதம் மொத்தம் ரூ.7,50,000 மதிப்பீட்டில் விபத்து காப்பீடு வைப்பு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் இதுபோன்று நலத்திட்ட உதவிகளை பெறும் மாணவா்கள் சிறந்த முறையில் கல்வி கற்று வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தெரிவித்தாா்.

முன்னதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நோ்முக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இரா.செந்தில்குமாா் ஓய்வு பெற்றமைக்காக தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பெற்ற ரூ.30,000 மதிப்புள்ள புத்தகங்களை தான் பணியாற்றிய 8 பள்ளிகளின் நூலகத்திற்கு வழங்கிடும் வகையில் மாவட்ட ஆட்சியரிடம் புத்தகங்களை வழங்கினாா்.

இக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments