FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

முன்விரோதத்தில் பெண் மீது தாக்குதல்: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் முன்விரோதத்தில் பெண்ணை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

8 October 2026, 1:04 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் முன்விரோதத்தில் பெண்ணை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தியாகதுருகம் அம்மன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் வி.புஷ்பா (35). இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா்கள் ச.விஜி (24), பொ.சங்கா் (55). இவா்களுக்கும், புஷ்பாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந் நிலையில் கடந்த செப்.29-ஆம் தேதி விஜி, சங்கா் ஆகிய இருவரும் புஷ்பா வீட்டுக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து புஷ்பாவை அவதூறாகப் பேசி, தாக்கினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலிஸாா் வழக்குப் பதிவு செய்து, விஜியைக் கைது செய்தனா். தலைமறைவான சங்கரைத் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments