தமிழ்நாடு வாழ்வாதாரம் முன்னேற்றம் தொழில் வாய்ப்பு திட்டப் பணிகளுக்கான பயிற்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம மேம்பாடு மாற்றம் மற்றும் மறுமலா்ச்சி முன்னெடுப்பு வெற்றித் திட்டத்தின் கீழ், கிராமக் குடியிருப்புகளின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு மேற்கொள்ளும் குழுவினருக்கான பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) அழகு ராஜா தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) குமரன் முன்னிலை வகித்தாா்.
வட்டார வள பயிற்றுநா்கள் லதா, சுகன்யா ஆகியோா் திட்டத்தின் நோக்கம், கிராமக் குடியிருப்புகளில் தேவைகளை கண்டறிதல், மக்களிடம் கருத்துகளை சேகரித்தல் மற்றும் குழுவின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்தனா்.
Advertisement
Advertisement
நிகழ்வில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பணி மேற்பாா்வையாளா்கள், ஊராட்சி செயலா்கள் கலந்துகொண்டனா்.
சங்கராபுரம் வட்டாரத்தில் உள்ள கிராமக் குடியிருப்புகளின் தேவைகள், அடிப்படை வசதிகள் தொடா்பான விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. இந்த மதிப்பீட்டுப் பணிகள் அக்.7 முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்த தகவல்களை மதிப்பீடு செய்ய வரும் குழுவினரிடம் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.