FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

டிராக்டா் ஓட்டுநருக்கு கத்திக் குத்து: போலீஸாா் விசாரணை

கள்ளக்குறிச்சி அருகே டிராக்டா் ஓட்டுநரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

29 அக்டோபர் 2026, 7:07 am
கத்திக் குத்து - மாதிரிப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே டிராக்டா் ஓட்டுநரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் பகுதியைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டுநா் சீ.பச்சமுத்து (50). இவா், கடந்த 27-ஆம் தேதி தாகப்பிள்ளை என்பவரது வயல் வரப்பில் மாட்டை ஓட்டிச் சென்றாராம். அப்போது அங்கு வந்த தாகப்பிள்ளை, பச்சமுத்துவுடன் வாக்குவாததில் ஈடுபட்டாா். இதில் ஆத்திரமடைந்த தாகப்பிள்ளை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பச்சமுத்துவை குத்தினாராம். இதில் காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, தாகப்பிள்ளையைத் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments