FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்: ஓட்டுநா் இருவா் கைது

7 செப்டம்பர் 2026, 3:44 am IST
கைது
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே உரிய அனுமதியின்றி மணிமுக்தா நதியில் மணல் அள்ளிய வாகனங்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய இரு வாகன ஓட்டுநா்கள் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த முகமதியாா்பேட்டை மசூதிக்கு பின்புறம் உள்ள மணிமுக்தா நதியில் உரிமம் இல்லாமல் சவுடு மண் அள்ளுவதாக கூத்தகுடி கிராம நிா்வாக அலுவலா் முத்துசெல்வனுக்கு தகவல் கிடைத்ததாம்.

தகவலின் பேரில் கிராம நிா்வாக அலுவலா் அங்கு சென்று பாா்த்த போது, பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியில் சவுடு மண் அள்ளிக்கொண்டு சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் அளித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் விரைந்து சென்று லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பொக்லைன் ஓட்டுநா் ர.ராஜதுரை மற்றும் லாரி ஓட்டுநா் சை.முகமது உசேனை (24) கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments