FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மார்பகம், கருப்பை புற்றுநோய் விழிப்புணர்வு

ஜிப்மர் நலவழிக் கல்வி மையம் சார்பில் பாரதிதாசன் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் கண்டறியும் முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

ஜிப்மர் நலவழிக் கல்வி மையம் சார்பில் பாரதிதாசன் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் கண்டறியும் முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

 அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியை காதம்பரி, நோய்த் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறை இணைப் பேராசிரியை சோனாலி சர்க்கார், மாதர் நோய் துறையைச் சேர்ந்த துணைப் பேராசிரியை சித்ரா ஆகியோர் கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் பாதிப்புகள், அதைக் கண்டறியும் முறைகள் குறித்து விவரித்தனர்.

 கல்லூரி முதல்வர் சசிகாந்ததாஸ், ஜிப்மர் சமூக சேவை அதிகாரி வெ.சித்ரலேகா, ரோட்டரி கிளப் தலைவர் ராகினி ஸ்ரீனிவாஸ், உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் முகாமில் பங்கேற்றனர். சமூக மருத்துவப் பிரிவு பிரம்சி லூகோஸ், மருத்துவர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments