FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வழக்குரைஞர் சங்கத் தலைவர் தேர்வு

காரைக்கால் வழக்குரைஞர் சங்கத் தலைவர் தேர்தலில் ஆர்.ராஜ்குமார் வெற்றிபெற்றார்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

காரைக்கால் வழக்குரைஞர் சங்கத் தலைவர் தேர்தலில் ஆர்.ராஜ்குமார் வெற்றிபெற்றார்.

காரைக்கால் வழக்குரைஞர் சங்கத் தலைவர், செயலர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான 2016-17-ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. 50 உறுப்பினர்கள் கொண்ட இச்சங்கத்தில் செயலாளராக எம்.முருகானந்தம், பொருளாளராக டி.வின்சென்ட்ராஜ் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் பதவிக்கு மட்டும் போட்டி இருந்தது. இந்தப் போட்டியில் ஆர்.ராஜ்குமார், ஆர்.பாஸ்கரன் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் அதிகாரியாக வழக்குரைஞர் என்.முத்துக்குமரன் செயல்பட்டார்.தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் 48 வாக்குகள் பதிவானதில், ராஜ்குமாருக்கு 30 வாக்குகளும், பாஸ்கரனுக்கு 18 வாக்குகளும் பெற்றனர்.

Advertisement

Advertisement

இதையொட்டி ஆர்.ராஜ்குமார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இவர் கடந்த 2008-09-ஆம் ஆண்டில் தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments