விவிபாட் இயந்திரங்கள் சரிபார்த்து சீல் வைப்பு
புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் விவிபாட் இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவடைந்த பிறகு வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் விவிபாட் இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவடைந்த பிறகு வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்ளும் நடைமுறையை தேர்தல் ஆணையம் வரும் பேரவை தேர்தலில் அறிமுகம் செய்கிறது.
புதுவையில் உருளையன்பேட்டை, உழவர்கரை, காரைக்கால் தெற்கு தொகுதிகளில் இம்முறை பின்பற்றப்பட உள்ளது. இதற்காக 100 விவிபாட் இயந்திரங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
தேர்தலில் வாக்களிக்கும் போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்களுக்கு அந்த ஓட்டுப்பதிவு இயந்திரம் காண்பிக்கும், சீட்டு ஒன்றிலும் பதிவாகும். அந்த சீட்டு வாக்குப்பதிவு இயந்திரத்திற்குள்ளாகவே விழுந்துவிடும்.
வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள் தனக்கு விழுந்துள்ள ஓட்டுக்களில் சந்தேகம் இருப்பதாக கூறினால் வாக்குப்பதிவு இயந்திரத்துக்குள் இருக்கும் சீட்டுகளை எடுத்து எத்தனை ஓட்டுகள் பதிவாகியுள்ளது என எண்ணப்படும். அதே எண்ணிக்கை வாக்குப்பதிவு இயந்திரத்திலும் காண்பிக்கப்பட்டதா என்பதை வேட்பாளர்கள் உறுதி செய்து கொள்ளலாம்.
இதன் மாதிரி ஓட்டுப்பதிவு அரசியல் கட்சியினர் முன் நடைபெற்றது.
இயந்திரத்தில் நேரடியாக பதிவான ஓட்டுக்களும், சீட்டுகள் மூலம் பதிவான ஓட்டுக்களும் அரசியல் கட்சிகள் முன்பு வியாழக்கிழமை சரிபார்க்கப்பட்டன. பின்னர், விவிபாட் இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலர் கனகராஜ், வட்டாட்சியர் அருண் அய்யாவு, துணை வட்டாட்சியர் குமாரவேல் மற்றும் காங்கிரஸ் சிவசாமி, என்.ஆர். காங்கிரஸ் வேல்முருகன், அதிமுக அன்துவான் சூசை, திமுக ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.