FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

அரசுப் பள்ளியில் புலிகள் தினம்

தேசிய பசுமைப் படை மற்றும் புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில், அரும்பார்த்தபுரம் திருவிக அரசு உயர் நிலைப் பள்ளியில் சர்வதேச புலிகள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 8:53 am IST
பகிர்:

தேசிய பசுமைப் படை மற்றும் புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில், அரும்பார்த்தபுரம் திருவிக அரசு உயர் நிலைப் பள்ளியில் சர்வதேச புலிகள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
 சர்வதேச புலிகள் தினத்தையொட்டி திருவிக அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
 புதுச்சேரி அறிவியல் இயக்கச் செயலர், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் "புலிகளும் அதன் அவசியங்களும்' என்ற தலைப்பில் பேசினார். மேலும், புலிகளை பாதுகாப்பது குறித்தும் புலிகள் சரணாலயங்கள் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றி நழுவுப் படக் காட்சிகளுடன் விளக்கினார்.
 "வனச் சூழலில் புலிகள்' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. கருத்தரங்கில் மாணவர்கள் புலி மற்றும் இயற்கை தொடர்பாக பல்வேறு வினாக்கள் எழுப்பி அதற்கான விளக்கங்களைப் பெற்றனர்.
 தொடர்ந்து, சர்வதேச புலிகள் தினத்தினை முன்னிட்டு நடத்திய ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இயற்கையைப் பேணிக்காக்க பசுமைப் படை மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
 முன்னதாக நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில், பள்ளி சமுதாய நலப்பணித் திட்ட அலுவலர் லதா வரவேற்றார்.
 பள்ளி தலைமையாசிரியர் ஆசைத்தம்பி தலைமைத் தாங்கினார். ஆசிரியை புஷ்பா மற்றும் பசுமைப் படை பொறுப்பாசிரியர் மதிவாணன் நோக்க உரையாற்றினர். பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். ஆசிரியர் முருகையன் நன்றி கூறினார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments