FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

ஜிப்மரில் கிருமித் தொற்று கட்டுப்பாடு பயிலரங்கம்

புதுச்சேரி ஜிப்மரில் கிருமித் தொற்றுக்கட்டுப்பாடு பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 8:52 am IST
பகிர்:

புதுச்சேரி ஜிப்மரில் கிருமித் தொற்றுக்கட்டுப்பாடு பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.
 பயிலரங்கை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் அசோக் சங்கர் படே தொடக்கிவைத்தார்.
 இதில் கிருமி தொற்றுக் கட்டுப்பாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் டி.எஸ்.எஸ். சுஜாதா மற்றும் கிருமி கட்டுப்பாட்டு குழுமம் மற்றும் தொற்றுக்கட்டுப்பாட்டு பிரிவு (பொறுப்பு) மருத்துவர் அபூர்பா சங்கர் சாஸ்திரி, செவிலியர் கண்காணிப்பாளர் சாந்தி தமிழ்மணி, சங்கரேஸ்வரி, ஒருங்கிணைப்பு செயலாளர், தொற்று கட்டுப்பாட்டு செவிலியர் ஜீவா ஆழ்வார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கிருமித் தொற்று கட்டுப்பாட்டு திட்டத்தின் முக்கியத்துவம் தடுக்கும் முறை, மருத்துவமனையின் தொற்று மற்றும் நுண்ணுயிர் தடுப்பு செயல்முறை கண்காணிப்பு, சரியான முறையில் கை கழுவுதல், மருத்துவ திட, திரவ மற்றும் மருந்துக் கழிவுகளை சரியான முறையில் பிரித்தெடுத்தல் மற்றும் அவற்றை அழிக்கும் முறை பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. தேசிய அளவிலான இந்த பயிலரங்கில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70 செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments