மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி
புதுச்சேரியில் இந்தியன் வங்கி சார்பில் கடன் உதவி வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியில் இந்தியன் வங்கி சார்பில் கடன் உதவி வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் முகாமை இந்தியன் வங்கி அவ்வப்போது நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடன் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் செüத்ரி அபிஜித் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு காசோலைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் துணைப் பொது மேலாளர் பி. வீரராகவன், நபார்டு வங்கியின் மாவட்ட மேலாளர் உமா குருமூர்த்தி, முன்னோடி வங்கியின் மேலாளர் சந்திரசேகர், இந்தியன் வங்கியின் கிளை மேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 80 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 5 கோடி கடன் வழங்கப்பட்டது. அதேபோல, விவசாய தனி நபர் கடனாக 100 பயனாளிகளுக்கு ரூ. 5 கோடி வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.