FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புதுச்சேரியில் சுதந்திர தின விழா கோலாகலம்

புதுச்சேரியில் நாட்டின் 72-ஆவது சுதந்திர தின விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

புதுச்சேரியில் நாட்டின் 72-ஆவது சுதந்திர தின விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
 புதுவை அரசு சார்பில் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி வைத்து, காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
 அதன் பின்னர் சுதந்திர தின உரையாற்றி, காவல்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள், பதக்கங்களை வழங்கினார்.
 அதைத் தொடர்ந்து காவல்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர் படை மற்றும் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
 அதன் பின்னர், ராஜஸ்தான், பஞ்சாப், தெலங்கானா, ஆந்திரம், மணிப்பூர், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம், கேரளம், திரிபுரா, கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் புதுவை மாநிலம் சார்பில் மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
 அதனைத் தொடர்ந்து தனியார், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், சிறந்த அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகளுக்கான விருதுகளை முதல்வர் வழங்கினார்.
 காவலர் பிரிவில் இந்திய ரிசர்வ் பட்டாலியனும், காவலர்கள் அல்லாத பிரிவில் தீயணைப்புத் துறையினரும், தேசிய மாணவர் படை முதுநிலை பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் விமானப்படையும், இளநிலை பிரிவில் தரைப்படைப் பிரிவு பெண்கள் பிரிவும் முதல் இடத்தைப் பெற்றன. சிறப்பு பரிசு கமாண்டோ பிரிவுக்கு வழங்கப்பட்டது.
 மேலும், சாரணியர்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆண்கள் பிரிவில் வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியும், பெண்கள் பிரிவில் திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், தனியார் பள்ளிகளில் ஆண்கள் பிரிவில் கே.எஸ்.பி.யும், பெண்கள் பிரிவில் அமலோற்பவம் பள்ளியும் முதல் இடத்தை பிடித்தன.
 கலை நிகழ்ச்சிகளில் அரசுப் பள்ளிகளில் சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளியும், தனியார் பள்ளிகளில் அமலோற்பவம் லூர்து அகாதெமி (சிபிஎஸ்இ) பள்ளியும் முதல் இடத்தை பிடித்தன. ஜவஹர் சிறுவர் இல்லத்துக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இறுதியில் தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது.
 அணிவகுப்பில் முதல் முறையாக பங்கேற்ற கமாண்டோ படையினர் தாங்கள் வருவதற்கு முன்பு கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். அப்போது பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.
 இதனால் அரங்கில் புகை மூட்டம் கிளம்பியது. அது குறித்து அறிவிப்பு ஏதும் இல்லாததால் விழாவில் பங்கேற்ற மக்களிடம் சிறிது பதற்றம் ஏற்பட்டது. அதன் பின்னர் போலீஸாரின் நிகழ்ச்சிதான் என்பதை அறிந்து மக்கள் அமைதியாகினர்.
 நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.கந்தசாமி, ஷாஜகான், பேரவை துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, அரசுக் கொறடா ஆர்.அனந்தராமன், புதுவை அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமி நாராயணன், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன், திமுக குழுத் தலைவர் இரா.சிவா, எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இரா.விசுவநாதன், முன்னாள் எம்.பி மு. ராமதாஸ், நியமன எம்.எல்.ஏ.க்கள் வி. சாமிநாதன், கே.ஜி.சங்கர், செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments