FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆளுநர் ஆய்வு

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் தொடர்பாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை  திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 9:51 am IST
பகிர்:

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் தொடர்பாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை  திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
புதுவை ஆளுநர் கிரண் பேடி தூய்மை,  நிலத்தடி நீர் மேம்பாடு,  மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்குவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து தனது வாராந்திர கள ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகிறார். புதுவையை நீர் மிகுந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் பல ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கி வரும் தனியார் நிறுவனங்கள்,  கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்குச் சென்று மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
மழைநீர் கட்டமைப்புகள் இல்லாத நிறுவனங்களில் மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக அவற்றை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி வருகிறார்.
அந்த வகையில், ஆளுநர் கிரண் பேடி புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்று ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
இதுகுறித்து ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியை நீர் வளம் மிகுந்த மாநிலமாக மாற்ற ஆளுநர் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஞாயிற்றுக்கிழமை அவ்வாறு ஒரு கள ஆய்வுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 17 தொழில்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன.  6 நிறுவனங்கள் தரமான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவியுள்ளன. கல்வி நிறுவனங்களும் நிலத்தடி நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
புதுவை அரசுப் பொறியியல் கல்லூரி,  மத்திய பல்கலைக்கழகம் ஆகியவற்றில்கூட மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மட்டுமே விரிவான மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மணக்குள விநாயகர் கல்லூரியில் மழைநீர் சேகரிக்கும் அமைப்பை ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக இந்தப் பணியை முடித்துவிடுவதாக நிர்வாகம் உறுதியளித்துள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments