கண்காணிப்பு கேமரா வசதியுடன் லாஸ்பேட்டையில் புறக்காவல் நிலையம் திறப்பு
புதுச்சேரி அருகே லாசுப்பேட்டையில் கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய புறக்காவல் நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
புதுச்சேரி அருகே லாசுப்பேட்டையில் கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய புறக்காவல் நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
புதுச்சேரி நகர எல்லையில் உள்ள லாசுப்பேட்டை பகுதியில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் சமூகவிரோதிகள் தமிழக எல்லைக்குள் சென்றுவிடுகின்றனர்.
இதனால், லாசுப்பேட்டை பகுதியில் தேவையற்ற சட்டம்-ஒழுங்கு பிரச்னை எழுந்து வருவதாகவும், இந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதுடன், எல்லை அருகே புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் இத்தொகுதி எம்.எல்.ஏ.வும், பேரவைத் துணைத் தலைவருமான வே.பொ.சிவக்கொழுந்து, அண்மையில் நடந்த பேரவைக் கூட்டத் தொடரில் வலியுறுத்தினார்.
அவரது கோரிக்கையை ஏற்று, லாசுப்பேட்டை நிலையத்துக்குள்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பேரவைத் துணைத் தலைவர் சிவக்கொழுந்து, புறக்காவல் நிலையத்தைத் திறந்துவைத்து, கண்காணிப்பு கேமராக்களை இயக்கிவைத்தார்.
விழாவில், புதுவை சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், லாசுப்பேட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன், உதவி ஆய்வாளர்கள் ஜாகீர் உசேன், கோவிந்தன் மற்றும் போலீஸார், குறிஞ்சி நகர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.