நீட் தேர்வு: அமலோற்பவம் பள்ளி சிறப்பிடம்
நீட் தேர்வில் புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
நீட் தேர்வில் புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி நீட் தேர்வுக்கு ஆகாஷ் நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி அளித்து வருகிறது. அதில் இந்த ஆண்டு பயிற்சி பெற்ற 113 பேரில் 90-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றனர். இதில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதுநிலை முதல்வர் லூர்துசாமி தலைமை வகித்தார்.
தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 455 மதிப்பெண் எடுத்த மாணவர் பிரசாந்துக்கு ஒரு பவுன் தங்கம், 452 மதிப்பெண் எடுத்த மாணவர் விக்னேஷ்வருக்கு அரை பவுன் தங்கத்தை முதுநிலை முதல்வர் லூர்துசாமி வழங்கினார். மேலும், நீட் தேர்வில் 150 வரை மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இனிப்புகளையும் பரிசாக அவர் வழங்கினார்.
கடந்த ஆண்டு இங்கு பயிற்சி பெற்ற மாணவர்களில் 90-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவம் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு தமிழக பாட திட்டத்தில் பயின்ற மாணவர்களில் ஒருவர் 455 மதிப்பெண்ணும், மற்றொரு மாணவர் 452 மதிப்பெண்ணும் எடுத்துள்ளதாக முதுநிலை முதல்வர் லூர்துசாமி தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.