FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் தத்கலில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் தட்கல் முறையில் ஜூன் 11-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று புதுவை பள்ளிக் கல்வி இயக்குநர் குமார் தெரிவித்தார்.

Updated On : 7 ஜூன் 2018, 8:47 am IST
பகிர்:

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் தட்கல் முறையில் ஜூன் 11-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று புதுவை பள்ளிக் கல்வி இயக்குநர் குமார் தெரிவித்தார்.
 இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 நடைபெறவுள்ள ஜூன், ஜூலை 2018, பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுத குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க இயலாமல், தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்களிடம் இருந்து சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 மார்ச், ஏப்ரல் 2018, பிளஸ் 2 தேர்வை பள்ளி மாணவராகவோ அல்லது தனித் தேர்வர்களாகவோ தேர்வு எழுதியிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மார்ச், ஏப்ரல் 2018, பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, வருகை புரியாத அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் எழுத விண்ணப்பிக்கலாம்.
 தத்கலில் விண்ணப்பிப்பவர்கள் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னையில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு எழுத இயலும். புதுவை இணை இயக்கநர் அலுவலகத்தில் ஜூன் 11 மற்றும்
 12-ஆம் தேதிகளில் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
 மார்ச், ஏப்ரல் 2018, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியவர்கள் தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலையும், தேர்வு எழுதாதவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை, விண்ணப்பத்தை பதிவு செயயும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.
 ஒரு பாடத்துக்கு ரூ.50 (இதரக் கட்டணம் ரூ.35), இத்துடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1,000 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.50 சேர்த்து இணை இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
 தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments