தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலரங்கம்
புதுச்சேரி கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரியில், úஸாஹோ கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், "க்ளிக்ட்ரிக்ஸ் 19' என்னும் பயன்பாட்டு கட்டமைப்பு போட்டிக்கான
புதுச்சேரி கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரியில், úஸாஹோ கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், "க்ளிக்ட்ரிக்ஸ் 19' என்னும் பயன்பாட்டு கட்டமைப்பு போட்டிக்கான ஒருநாள் பயிலங்கம் அண்மையில் நடைபெற்றது.
பயிலரங்கத்துக்கு கல்லூரித் தலைவர் எம். தனசேகரன், துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் எஸ்.மலர்க்கண் தொடக்கிவைத்தார்.
ஒருங்கிணைப்பாளர்கள் ஜெரி ஜான், ப்ரின்ஸி கிறிஸ்டி ஆகியோர் பயிலரங்கத்தை நடத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் இப்பயிற்சி பயிலரங்கில் பயின்று பயனடைந்தனர்.
வேலைவாய்ப்பு துறைத் தலைவர் எம்.ஜெயக்குமார் பயிற்சி பயிலரங்கத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.