FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு செப்.10 வரை விண்ணப்பிக்கலாம்

புதுவையில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு செப்.10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று புதுவை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் குப்புசாமி தெரிவித்துள்ளார்.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

புதுவையில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு செப்.10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று புதுவை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் குப்புசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செப்டம்பர், அக்டோபரில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
விண்ணப்பங்களை செப். 10-ஆம் தேதி வரை அலுவலக நாள்களில் (செப்.9 நீங்கலாக) அரசுத் தேர்வுகள் சேவை மைங்களில் (எர்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற் உஷ்ஹம்ண்ய்ஹற்ண்ர்ய்ள் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங் இங்ய்ற்ங்ழ்) ஆன்-லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். ஆண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை முத்தியால்பேட்டை சோலைநகர், ஸ்ரீஅரவிந்தர் ஆங்கில மேல்நிலைப் பள்ளியிலும், பெண் விண்ணப்பதாரர்கள் புதுச்சேரி வீரமாமுனிவர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் 
ஆன்-லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
தேர்வுக் கட்டண விவரம்: தனித்தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணத் தொகை ரூ.125-இவற்றுடன் பதிவுக் கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.175 பணமாக செலுத்த வேண்டும். 
ஆன்-லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசு தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். 
மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறுபவர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் வரும் செப்.11, 12 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு மையங்கள்: விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு 
புதுச்சேரியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும். 
தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பிறகே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments