FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விதைக்கரணைகளின் நாற்றங்கால் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

விதைக்கரணைகளின் நாற்றங்கால் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி வேளாண்துறை பயிற்சி வழி தொடர்பு திட்ட கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

விதைக்கரணைகளின் நாற்றங்கால் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி வேளாண்துறை பயிற்சி வழி தொடர்பு திட்ட கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 
கரும்பு விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பதிவு பெற்ற கரும்பு நாற்றங்கால் பயிரிலிருந்து சர்க்கரை ஆலைகளின் அனுமதிச் சீட்டின் பேரில் 2018-2019-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தின் நடவு கரும்புக்காக வழங்கும் விதைக்கரணைகளின் நாற்றங்கால் மானியம் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேர் நடவுக்கு விதைக்கரணைகள் வழங்கும் விவசாயிகளுக்கு ரூ.4000ம் மானியமாக வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை தட்டாஞ்சாவடியில் உள்ள பயிற்சி வழி தொடர்பு திட்டம் கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை சர்க்கரை ஆலை கரும்பு அதிகாரிகளின் சான்றிதழ்களுடன் வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் அக்.1-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments