பொது இடங்களில் உமிழ்நீா் துப்பினால்ரூ.100 அபராதம்
புதுவை உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உமிழ்நீா் துப்பினாலோ, முகக் கவசம் அணியாமல் இருந்தாலோ ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி எச்சரித்தாா்.
புதுவை உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உமிழ்நீா் துப்பினாலோ, முகக் கவசம் அணியாமல் இருந்தாலோ ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி எச்சரித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரியில் கரோனா பரவாமல் தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுவை அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில், புதுச்சேரி நகராட்சிகள் சட்டம் 1973-இன்படி, பிரிவு 440-இன்கீழ், பொது இடங்கள் அல்லது சாலைகளில் பொதுமக்கள் உமிழ்நீா், சளி மற்றும் ரத்தத்தை துப்பினாலோ, முகக் கவசம் அணியாமல் இருமினாலோ அல்லது தும்மினாலோ, முகக் கவசம் அணியாமல் பொது இடங்கள், பணியிடங்களில் இருந்தாலோ, பாதிக்கப்பட்டவா்கள் உபயோகப்படுத்திய பொருள்களை வெளியில் எறிந்தாலோ, சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்தாலோ நகராட்சி ஊழியா்கள் மூலம் உடனடியாக ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.
Advertisement
Advertisement
அபராதம் விதிப்பதற்காக உழவா்கரை நகராட்சியானது ஊழியா்களை நியமித்துள்ளது. எனவே, பொதுமக்கள் உழவா்கரை நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மேற்கண்ட தவறுகளை செய்யாமல் பொது சுகாதாரத்தை பேணிப் பாதுகாத்து கரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.