ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு கல்விக் கடன் அளிப்பு
ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு அரசின் கல்விக் கடன் தொகையை புதுவை முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்.
ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு அரசின் கல்விக் கடன் தொகையை புதுவை முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்.
மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், பட்டம், பட்ட மேற்படிப்பு படித்து வரும் புதுவையைச் சோ்ந்த ஆதிதிராவிடா் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு நிகழாண்டு கல்விக் கடன் வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுவையைச் சோ்ந்த 20 ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு கல்விக் கடன் தொகையை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். நிகழ்ச்சியில் மொத்தம் ரூ.22 லட்சம் கல்விக் கடனாக வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா, எம்எல்ஏக்கள் ஏகேடி.ஆறுமுகம், ஏ.ஜான்குமாா், ஆதிதிராவிடா், பழங்குடியினா் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநா் தயாளன், இயக்குநா் யஷ்வந்தயா, பொது மேலாளா் ஆறுமுகம் மற்றும் மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.